இந்தியா ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து தெங்குமரஹாடா செல்லும் வழியில் அரசு பேரூந்தை ஒரு மணி நேரமாக வழி மறித்த நான்கு காட்டு யானைகளால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தெங்குமரஹாடா கிராமத்திற்கு செல்லும் வழியில் 4.00 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அரசு பேரூந்தை, காராச்சிக்கொரை கிராமத்தை தாண்டி சென்ற போது, திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த நான்கு காட்டு யானைகள் அரசு பேரூந்தை வழிமறித்துள்ளது. அத்துடன் பேருந்தை நோக்கி முன்னேறிய காட்டு யானைகள் சுமார் ஒரு மணி நேரம் நகராமல் நின்றதால், பயணிகள் பீதி அடைந்ததுள்ளனர்.
நீண்ட நேரத்திற்கு பின் யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. அரசு பேருந்தும் பயணிகளுடன் பத்திரமாக நகர்ந்து சென்றுள்ளது.
0 comments:
Post a Comment