சபாநாயகர் விமர்சனம் செய்ய முடியாது: மகிந்த ராஜபக்ச

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சபாநாயகர் கரு ஜயசூரிய விமர்சனம் செய்ய முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு நாட்டின் ஜனாதிபதியை விமர்சனம் செய்ய கரு ஜயசூரியவிற்கு உரிமையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வார இறுதி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மஹிந்த ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கருத்தொன்று தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினருக்கும் விமர்சனங்களை வெளியிட அதிகாரம் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், சபாநாயகர் என்ற பதவியை வகிக்கும் கரு ஜயசூரிய அவ்வாறு ஜனாதபிதியை விமர்சனம் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அமைப்பு பேரவை தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து குறித்து சபாநாயகர் நாடாளுமன்றில் விமர்சனங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment