சிற்றூர்தியில் கஞ்சா கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நொச்சியாகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, நொச்சியாகம - ஹில்மில்லகுளம் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து, சுமார் 5 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெயாங்கொடை பகுதியை சேர்ந்த 30 மற்றும் 40 வயதுடையவர்களே கைதானதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment