வரவு-செலவுத்திட்டம் மக்களுக்கு உதவாது. பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் பிடிக்குள் 2019 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவு திட்டம் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, தெரிவித்துள்ளார்.

அத்துடன் வரவு செலவு திட்டத்தை கூட பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாத நெருக்கடிக்குள் அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இன்று வரவு செலவு திட்டத்தை முன்னிலைப்படுத்தி நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.  தற்போது சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டமானது  அமைச்சரவைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பிலான கோவைகளை மாத்திரமே உள்ளடக்கியுள்ளது. எவ்விதத்தித்திலும் நாட்டு மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment