சைக்கிளில் கசிப்புக் கொண்டு சென்ற இருவர் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் இளவாலை பனிப்புலம் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
காங்கேசந்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வீதியால் சென்ற இருவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 5 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் பனிப்புலம் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment