குடும்பமே விபத்தில் சிக்கி பெரும் சோகம்!
தங்காலை - மாத்தறை பிரதான வீதியில் சீனிமோதர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாய் மற்றும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியொன்றும், பாரவூர்தியொன்றும் மோதி இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மூன்று வயது குழந்தையும், அவரின் தாயாருமே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் குழந்தையின் தந்தை மற்றும் சகோதரரும் படுகாயமடைந்து தங்காலைஆரம்ப மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment