மாணவர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த திணைக்களத்தின் சூரியபொக்குன முகாமில் பணியாற்றும் அதிகாரி ஒருவரே இன்று கைது செய்யப்பட்டார்.
அம்பாறை, தெஹியத்தகண்டி சூரியபொக்குன பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த 11 ஆம் திகதி 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டது.
அதில் ஒரு சிறுவன் குறித்த சிவில் பாதுகாப்பு அதிகாரியின் மகனாவார்.
இந்த நிலையில், குறித்த சிறுவன் இந்தச் சம்பவம் தொடர்பில் தமது தந்தையான சிவில் பாதுகாப்பு அதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, சிவில் பாதுகாப்பு அதிகாரி, தமது மகனுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட மாணவனைத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த மாணவன் தற்போது தெஹியத்தகண்டி ஆதார மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் குறித்த சிவில் பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment