இந்தியா விழுப்புரம் அருகே அலைபாயுதே பட பாணியில் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவரால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரே பிரிவில் 10ம் வகுப்பில் படித்து வரும் மாணவர் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு கடந்த 12ம் தேதி பாடசாலை வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில்; தாலியைக் கட்டியுள்ளார்.
இந்நிலையில் தாலி கட்டிய மாணவன் சக மாணவர்கள் இடையே தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக சக மாணவர்களிடம் கூறியதை அடுத்து அவ்விடயம் பாடசாலை முழுவதும் அனைத்து மாணவர்களிடையே பரவியுள்ளது.
இது சம்பவம் சம்பந்தப்பட்ட மாணவியின் வீட்டாருக்கும் தெரியவர மாணவியை திட்டி கட்டிய தாலியை அறுத்து எறிந்துவிட்டு பாடசாலை தலைமை ஆசிரியரிடம் முறையிட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து தலைமையாசிரியர் மாணவனை பாடசாலைக்கு வரக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 comments:
Post a Comment