அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார்??? பாகிஸ்தான் உறுதி...

பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை விமானியான் அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உறுதியளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானியான அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியது. இவ்விடயம் தொடர்பாக மத்திய அமைச்சரவை இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனை நடக்க இருக்கின்ற வேளை பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை விமானியான அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உறுதியளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேவேளை இந்திய விமானப்படை விமானியை விடுவிக்கவேண்டும் என்று இந்தியா முழுவதும் கோரிக்கைவிடுத்து சமுகவலைத்தளங்களில் பதிவிடுகின்றார்கள்.

மேலும் எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை ஜம்மு காஸ்மீர் எல்லை பகுதிக்கு சென்று ஆய்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment