போலியாக அச்சிடப்பட்ட அமெரிக்க டொலர்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்காஹவெல பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, 24 ஆயிரத்து 100 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் - தேலியாகோன்ன பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் போலி நாணயத்தாள்களை மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்காக கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment