காணாமல் ஆக்கப்பட்டோர் கையெழுத்து போராட்டம் ஆரம்பம்!

வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை. இந்நிலையில் அமெரிக்காவின் தலையீட்டினைகோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இன்று காலை 10 மணிக்கு நல்லூர் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மெளனம் காத்து கொண்டிருக்கிறது. 


இந்நிலையில் தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு, கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியு ம் சங்கத்தினால் வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் இந்த கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


மேலும் இந்த போராட்டத்தின் பிரதான விடயமாக, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிடவேண்டும் எனக்கோரப்பட்டுள்ளது.






#TamilPeople #Sumanthiran #DisappearedPeople #RanilWickramasinghe #MahindaRajapaksa #MaithripalaSirisena #TamilNewsKing



Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment