வான் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று இரவு நுவரெலியா ஹற்றன் பிரதான வீதியில் நிகழ்ந்துள்ளதாக தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சிவனொளிபாதமலை யாத்திரையை மேற்கொண்டு விட்டு நுவரெலியா பகுதியில் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
வான் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொழும்பு கிரிபத்கொடை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment