பைபிள் வசனத்தை மறந்துவிட்டதற்காக பெற்றோர் மகனை அளவுக்கு அதிகமாக கொடுமைப்படுத்தி இறுதியில் உயிரோடு எரித்துக் கொன்று புதைத்துவிட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் குறித்த சிறுவன் திடீரென மரணித்ததால் பொலிஸார் இச் சம்வம் குறித்து மேலதிக விசாணைகளை ஆராம்பித்துள்ளனர்.
எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
7 வயது நிரம்பிய ஏதன் ஒருநாளைக்கு 13 பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டுமென்பது பெற்றோர்களின் கட்டாயமாக இருந்தது.
இந்நிலையில் மனப்பாடம் செய்த பைபிள் வசனங்களை மறந்து விடுவதால்,பெற்றோர்கள் சிறுவன் மீது ஆத்திரமடைந்து 19 கிலோ எடை கொண்ட மரத்தை தூக்கி நிற்கும்படியும், கடுமையாக துன்புறுத்தியும், தலை மீது ஏறி நிற்போம் என்றும் தினமும் 100 முறை ஓங்கி உதைப்போம் எனவும் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களை சிறுவனின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதியில் ஒரு சிறிய பெட்டி ஓடர் செய்து, அதில் ஏதனை உயிரோடு படுக்க வைத்து, எரித்துக் கொன்றே விட்டோம். இவ்வளவும் பைபிள் வசனங்களை மறந்துவிட்டான் என்பதற்கான காரணமாகவே இவ்வாறான செயலில் ஈடுபட்டோமென இருவரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment