மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 29 ஓட்டங்களினால் வெற்றிவாகை சூடியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 418 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் 77 பந்துகளில் 13 நான்கு ஓட்டங்கள், 12 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 150 ஓட்டத்தை அதிகூடுதலாக பெற்றுக்கெடுத்தார். இயன் மோகன் 103 ஓட்டங்களைப் பெற்றார்.
இதையடுத்து, 419 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 48 ஓவர்களில் 389 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் கிறிஸ் கெய்ல் 97 பந்துகளில் 11 நான்கு ஓட்டங்கள், 14 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 162 ஓட்டங்களைப் அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.
இதனூடாக ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் கிறிஸ் கெய்லும் இணைந்துள்ளார்.
0 comments:
Post a Comment