சட்ட விரோத சாராய விற்பனையில் ஈடுபட்டவருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் இன்று 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
உரிய அதிகாரியின் அனுமதிப் பத்திரமின்றி 180 மில்லி லீற்றர் அரச சாராயத்தை குறித்த நபர் விற்பனை செய்துள்ளார்.
சாவகச்சேரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணையில் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மீசாலை தெற்கைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment