தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் வவுனியாவில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்
வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பொது சுகாதார பரிசோதகர் எம்.தியாகலிங்கம் தலைமையில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
தொழுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளக் கூடிய வழிவகைகளை குறித்து இதன்போது ஆராயப்பட்டன.
தொழுநோய் கட்டுப்படுத்தும் செயல்திட்டத்தை கடந்த காலங்களில் முன்னெடுத்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி பசுபதிராஜா, பிராந்திய சுகதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மகேந்திரன், தொற்று நோயியல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் லவன், தாபரி கலாமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள்மற்றும் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment