காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்திலிருந்து, பேரணியாக மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகள் இடம் பெறும் பகுதியை வந்தடைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்டச் செயலகம் முன்பாக ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டாம், இலங்கை அரசை நீதிப்பொறிமுறையிலிருந்து தப்ப வைக்கக் கூடாது
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், மன்னார் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் யார், புதைத்தவர்கள் யார், உள்ளிட்ட பல்வேறு விடையங்களை முன் வைத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு எழுதப்பட்ட மகஜர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளாரிடம் கையளிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment