மன்னார் பொது மயானம் கையளிப்பு

மன்னார், நாதாழ்வு மக்களின் பொது மயானம் இன்றையதினம் கையளிக்கப்பட்டது.

குறித்த மயானம் வனவளத்துறையினரால் மன்னார் பிரதேச செயலர் திருமதி சிவசம்பு கனகாம்பிகையிடம் கையளிக்கப்பட்டது

நாகதாழ்வு புத்தீவு பிட்டி பகுதியிலிருந்த பொது மயானம் போரின் பின்னர் வனவளத்திணைக்களத்தினரால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டது.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மாவட்ட செயலரிடமும் மக்கள் முறைப்பாடு செய்தனர்.

அதற்கமைய வனவளத்திணைக்களத்தினரால் பழைய மயானத்துக்குப் பதிலாக வேறு இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.

இந்த இடம் வீதி ஓரத்தில் இருப்பதால் மயானத்துக்குப் பொருத்தமில்லாத இடம் என்று மன்னார் பிரதேச செயலரிடம் மக்கள் தெரிவித்திருந்தனர்.

மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக நாகதாழ்வு மக்களின் பழைய மயானத்தை ஒப்படைப்பதற்கு வனவளத்துறையினர் சம்மதம் தெரிவித்திருந்தனர்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment