அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலா, பயணித்த விமானம் எனக் கூறப்படும் விமானத்தின் சில பாகங்கள் ஒல்லண்ட்- ரொட்டர்டம் கடற் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே விமானத்தின் இருக்கை பகுதிகள் பிரான்ஸ் கடற்கரையில் கண்டெ டுக்கப்பட்டன. இந்த இடத்தில் இருந்து சுமார் 450 மைல்கள் தூரத்தில் குறித்த விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆகையால் பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா, உயிரிழந்திருக்க கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்த தகவல்கள் உறுதி ப்படுத்தப்படவில்லை.
28 வயதான எமியானோ சலா, இதற்கு முன்னதாக பிரான்ஸின் நான்டஸ் அணிக் காக விளையாடி வந்தார். இதையடுத்து,
இங்கிலீஷ் பீரிமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடும் இங்கிலாந்தின் வேல்ஸ் கழக அணியான கார்டிப் சிட்டி அணிக்காக விளையாட, கடந்த 19ஆம் திகதி 19.75 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஒப்பந்தம் முடிந்த இரண்டாவது நாள், அதாவது 21ஆம் திகதி, கார்டிஃப் நகருக்கு Piper Malibu எனும் சிறிய ரக தனியார் விமானத்தில் விமானி, டேவிட் இபாட்சனுடன் சலா தனி விமானத்தில் பறந்துக் கொண்டிருந்த வேளை, அந்த விமானம் திடீரென மாயமானது.
இதனையடுத்து, விமானம் மாயமாவதற்கு முன்னர் அவர் வெளியிட்டிருந்த குரல் பதிவொன்றிற்கமைய கையடக்க தொலைபேசி தரவுகள் மற்றும் செயற் கைக்கோள் படங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கடல் பகுதிகளில் தேடுதல் பணிகள் இடம்பெற்றன.
எனினும், குறித்த விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேடும் பணிகள் நிறுத் தப்பட்டன.
ஆனால் எமிலியானோ சலா, பயணம் செய்த விமானத்தைத் தேடும் பணிக்கு அவரது குடும்பத்தினர் இணையத்தில் நிதியுதவி திரட்டி, தேடும் பணிகளை முன்னெடுத்தனர். இதற்காக பிரான்ஸ் கால்பந்து அணியின் இளம் நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்வேவும் தன் பங்கிற்கு 30000 யூரோக்கள் நிதியுதவி வழங்கினார்.
இந்த நிலையிலேயே எமிலியானோ சலா, பயணித்த விமானம் எனக்கூறப்படும் விமானத்தின் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எனினும், ஒருபுறம் இரசிகர்கள், வீரர்கள் என சிலர் அவரின் விமானம் மாயமானதற்கு ஒரிரு நாட்களுக்கு பிறகு அவர் இறந்து விட்டதாக அஞ்சலி செலுத்தி செலுத்த தொடங்கினர். மறுபுறம் அவர் மீள வருவார் என்ற அதீத நம்பிக்கை கொண்டுள்ள சலாவின் சில இரசிகர்கள், அவருக்காக இன்னமும் பல இடங்களில் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.
எதுஎவ்வாறாயினும், அவர் உயிருடன் உள்ளாரா அல்லது இறந்து விட்டாரா? என்ற உண்மையான தகவல்கள் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment