வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அவமதிப்பு வழக்கின் விசாரணைத் திகதியை குறிப்பதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை மீள அந்த பதவியில் நியமிக்க உத்தரவிட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த கட்டளையை நிறைவேற்றத் தவறிய நிலையில், விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ்வரனினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கு எதிராகக் கடந்த விசாரணை தினத்தில் விக்னேஸ்வரன் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், இன்று அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment