புத்தள - மொனரகல, மஹகொடயாய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
காயமடைந்த ஐவர் புத்தள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சியபலாவ தேவாலயத்திற்கு யாத்திரை சென்ற மாலபே பகுதியை சேர்ந்த சிலர் பயணித்த சிறிய ரக பாரவூர்தி மற்றும் தனியார் பேருந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாலபே பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டதுடன் புத்தள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment