மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் காதலன் மற்றும் அவருடைய நண்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்கிற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய காதலி ஜோதியுடன் வெளியில் சென்றுள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் சிலர் தன்னை தாக்கிவிட்டு ஜோதியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையிலும் எந்த தடயமும் கிடைக்காததால் பொலிஸார் பெரிதும் திணற ஆரம்பித்தனர்.
பிரேத பரிசோதனை சரியாக நடைபெறவில்லை என ஜோதியின் பெற்றோர் தொடர்ந்து குற்றம் சுமத்தியதை அடுத்து அவர்களின் முன்னிலையில், மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது இரும்பு கம்பியை கொண்டு ஜோதியின் தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்திருப்பதும், அதற்கு முன்பு பாலியல் வல்லுறவுக்குட்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், சந்தேகமடைந்த பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்த ஆரம்பித்தனர். அப்பொழுது ஸ்ரீநிவாஸ் குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
பல பெண்களை தன்னுடைய காதல் வலையில் விழ வைத்த ஸ்ரீநிவாஸ், அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி மிரட்டி வந்திருப்பது தெரியவந்தது.
அந்த வரிசையில் விழுந்த ஜோதி, திருமணம் செய்துகொள்ளுமாறு ஸ்ரீநிவாஸிற்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவன், தன்னுடைய நண்பன் பவானுடன் சேர்ந்து கடந்த 11ஆம் திகதி தீர்த்து கட்டியுள்ளான். இந்த சம்பவத்தில் யாருக்கும் சந்தேகம் வந்துவிட கூடாது என்பதற்காக தன்னை தானே தாக்கிக்கொண்டுள்ளான்.
மேலும், ஸ்ரீநிவாசன் தொலைபேசியிலிருந்து பல பெண்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பொலிஸார் கைப்பற்றியிருக்கின்றனர்.
இந்த நிலையில் பொலிஸார் பவான் மற்றும் ஸ்ரீநிவாஸை கைது செய்துள்ளனர்.
அதேசமயம் சரியாக பிரேத பரிசோதனை செய்யாத அரசு வைத்தியசாலை வைத்தியர் விஜயபாரதியை பணியிடை நீக்கம் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment