சனநாயகம் தொடர்பாக சமூக கருத்தாடலொன்றை ஏற்படுத்துவதற்காக களணி பல்கலைகழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து மக்களை அறிவுறுத்துவதற்காக “பெளர” என்ற பெயரில் குறுந்திரைப்பட விழாவொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் இன்றுநடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சனநாயகம் , மக்கள் இறைமை மற்றும் சர்வசன வாக்குரிமை தொடர்பாக பொது மக்களிடத்தில் புரிந்துணர்வை மேம்படுத்தலே திரைப்படத்தின் நோக்கமாகும்.
குறித்த விழாவில் திரையிடப்படுவதற்கான குறுந்திரைப்படப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன, போட்டிக்கு மும்மொழி குறுந்திரைப்படங்களை சமர்ப்பிக்க முடியும். ஒவ்வொரு குறுந்திரைப்படமும் 5 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவை HD தரத்தில் இருக்க வேண்டும். அவர் தெரிவித்தார்.
இரு பிரிவுகளாக நடத்தப்படவுள்ள இப் போட்டியில் திறந்த பிரிவில் முதலிடத்திற்கு ஒரு இலட்சத்து, 25 ஆயிரம் ரூபாவும் இரண்டாம் இடத்துக்கு 75 ஆயிரம் ரூபாவும் மூன்றாமிடத்திற்கு 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
பாடசாலை பிரிவில் முறையே 50 ஆயிரம், 30 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாவும் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்பாக குறுந்திரைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 08 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான தரங்கனி திரையரங்கில் திரையிடப்படும் அன்றைய தினம் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் எதிர்கால நிகழ்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்வதற்கான இணக்கத்தை பெற்றுக்கொள்வோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment