யாழ்ப்பாணம் கால்பந்தாட்ட லீக்கின் 75 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு யாழ்.மாவட்ட ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரில் , குருநகர் பாடும்மீன் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.
யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் மின் ஒளியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற ஆட்டத்தில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து இளவாலை யங்ஹன்றிஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது.
முதல் பாதியாட்டம் எவ்வித கோல்களின்றி முடிவடைந்தது. இடைவேளையின் பின் இரண்டாம் பாதியாட்டத்தில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக்கழக அணி 2 கோல்களைப் பதிவு செய்தது.
ஆட்டநேர முடிவில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக்கழக அணி 2:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
குருநகர் பாடும்மீன் விளையாட்டுக்கழக அணி சார்பில் சாந்தன்,கெயினஸ் தலா ஒரு கோல் பதிவு செய்தனார்.
0 comments:
Post a Comment