அம்பாறையில் நள்ளிரவில் வந்த குள்ள மனிதரால் அந்தப் பகுதியில் அச்சநிலை காணப்படுவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் இரவு நேரத்தில் வரும் 2 அடி நபரால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். குறித்த பகுதியில் வயல்களுக்கு பல முறை இந்த அமானுஸ்ய நபர் வந்து சென்றதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2ஆம் திகதி தனது சோள பயிர்ச் செய்கைக்கு இரவு நேர பாதுகாப்பு வழங்கிய விவசாயி ஒருவர் குள்ள நபரை பார்த்ததும் பயத்தில் ஓடிச் சென்றுள்ளார். அத்துடன் அருகிலுள்ள விவசாயிகளை அழைத்து சென்று பார்த்த போது குள்ள மனிதர் மாயமாகியுள்ளார். மேலும் குள்ள மனிதர் வந்து சென்றமைக்கான பாதச் சுவடுகள் ஆதாரமாக காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் அனுராதபுரம், பொலநறுவை பகுதிகளில் வெளிச்சமான பொருள் ஒன்று தரையிறக்குவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது தொடர்பில் ஆராய்ந்த துறைசார் அதிகாரிகள் அது பறக்கும் தட்டாக இருக்கலாம் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குள்ள மனிதர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளமை பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment