சென்னை அம்பத்தூரில் பணத்தகராறில் ஏற்பட்ட பிரச்சனையில் மதுபோதையில் ஒருவர் கழுத்து அறுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணூர்பேட்டையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கண்ணனுக்கும் இவரது அறையில் தங்கி உள்ள பாலாக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூபா 21000 பணத்தை எடுத்து சென்றமை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இருவரும் மது போதையில் இருந்ததாகவும் அப்பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் கண்ணன் பாலாவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதில் இரத்தவெள்ளத்தில் கிடந்த பாலாவை காப்பாற்ற அருகிலுள்ளவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#CrimeNews #Alcohol #Emergency #Hospital #PoliceInquiry #AmbaturPolice #EmergencyCase #TamilNewsKing
0 comments:
Post a Comment