வவுனியா பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கான சத்துணவு கடந்த ஒருவார காலமாக வழங்கப்படுவதில்லையென அந்தப் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் கல்வி பயிலும் 82 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலய மாணவர்களே இந்தப் பரிதாப நிலைக்கு உள்ளாகினர்.
192 மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையில் 82 மாணவர்கள் ஆரம்பப் பிரிவில் கல்வி பயில்கின்றனர். கடந்த ஒரு வாரமாக இங்கு பகல் உணவு வழங்கப்படவில்லை.
பாடசாலையில் அதிபர் இல்லாததால் பதில் அதிபரே கடமையாற்றி வருகின்றார். எனினும் அவர் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வவுனியாவில் பின்தங்கிய கிராமமான அண்ணாநகரில் உள்ள பாடசாலையில் வறுமை நிலையில் உள்ள மாணவர்களே கல்விபயில்கின்றனர்.
அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவுத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கும் நிலையில் உள்ளன.
இது தொடர்பில் கல்வி அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment