சாரதியின் கவனவீனத்தால் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று சிலாபம் - மஹவெவ பகுதியில் நடந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 22 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் சாரதியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி மின்மாற்றியில் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பேருந்து பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment