இந்தியாவை பிரித்தாள பாகிஸ்தான் முயற்சிக்கிறது- பிரதமர் மோடி!
தீவிரவாத தாக்குதல் மூலம் நமது வளர்ச்சியை தடுக்க எதிரிகள் முயற்சி செய்கின்றனர் என பிரதமர் மோடி பேசினார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்திய நாடு ஒற்றுமையுடன் வாழ்ந்து, ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக போராடி, ஒன்றாக வெற்றி காண வேண்டும். நமது ராணுவத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது. இந்தியாவை பிரித்தாள பாகிஸ்தான் முயற்சிக்கிறது. எதிரிகள் நம் ஒற்றுமையை சீர்குலைக்க தீவிரவாத தாக்குதல்களை நடத்துகின்றனர்.
நம் வளர்ச்சியை தடுக்க முயல்கின்றனர். இந்திய மக்களாகிய நாம் ஒற்றுமையுடன் இணைந்து அவர்கள் திட்டங்களை முறியடிக்க வேண்டும். இந்தியா எந்த தயவும் இன்றி வளர்ச்சி அடையும், தனியாக போராடும், அதில் வெற்றியும் பெறும் என கூறினார்.
0 comments:
Post a Comment