முச்சக்கரவண்டியில் மரை இறைச்சியை கொண்டு சென்ற இருவர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஹல்தமுல்லை – வேயெலிய பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
சோரகுண மற்றும் அமிலகம பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 150 கிலோ கிராம் மரை இறைச்சி மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
0 comments:
Post a Comment