நடிகை பானுப்ரியா சென்னை தியாகராய நகரில் வசித்து வருகிறார். அவரது வீட்டு வேலைக்கு சந்தியா என்ற சிறுமியை அவரது தாயார் பிரபாவதி வேலைக்கு சேர்த்து விட்டிருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாவதி ஆந்திர மாநிலம் சாமர்லா கோட்ட பொலிஸில் பானுப்ரியா மீது புகார் செய்திருந்தார். தன் மகளுக்கு சம்பளம் தராமலும், உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தியதாவும் கூறினார்.
இந்த முறைப்பாட்டையடுத்து பானுப்ரியா வீட்டில் இருந்த சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். பானுப்ரியாவின் அண்ணன் சென்னை பாண்டி பஜார் பொலிஸ் நிலையத்தில் பிரபாவதி மீது கொடுத்த திருட்டு முறைப்பாட்டில் பொலிஸார் பிரபாவதியைக் கைது செய்தனர்.
இது ஆந்திர மாநில சாமர்ல கோட்டா மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கிலிருந்து தப்பிக்க சென்னை பொலிஸாருடன் இணைந்து பானுப்ரியா சதி செய்வதாகவும், பிரபாவதி மீது பொய் புகார் கொடுத்து கைது செய்திருப்பதாகவும் கூறி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் சாமர்ல கோட்ட போலீஸ் நிலையம் முன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
பானுப்ரியாவை கைது செய்யும்படி அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
0 comments:
Post a Comment