இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எந்த விமானங்களையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கம் அளித்துள்ளது.
மேலும், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாகவும், ஒரு இந்திய விமானி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் விடியோக்களும், புகைப்படங்களும் பழைய புகைப்படங்கள் என்று இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன் வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஸ்;மீர் பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்த இந்திய போர் விமானத்தில் வந்த இரு விமானிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் தெரிவித்திருந்தார். கைதான மற்றொரு இந்திய விமானி தன்னுடைய பெயர் மற்றும் விமானப்படையில் தனது பணி அடையாள எண் ஆகியவற்றை அந்நாட்டு அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
#PakistanAirForceOurPride #PulwamaAttack #SurgicalStrike2 #IndiaWar #PakistanWar #IndoPakistanWar #IndiaPakistan #ArmyBase #Modi #NarendraModi #IndiaStrikesPakistan #Surgicalstrike #IndianAirForce #IndiaStrikesBack #TamilNewsKing
0 comments:
Post a Comment