கஞ்சா போதைப் பொருளை பயண பொதியில் மறைத்து வெளிநாடு செல்ல முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குறித்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து, 2 கிலோ கிராமுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டுபாய் நாடு நோக்கி பயணிக்க இருந்த நிலையில் அவரை பரிசோதனை செய்த போது கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment