ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஜாஹிதீன் தனது 93 வயதில் காலமானார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் முன்னாள் சோவியத் யூனியனின் ஆதிக்கம் 10 ஆண்டுகளுக்கு பின் கடந்த 1989ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. அவர்களுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற கொரில்லா படைகள் போரிட்டன. மிக சிறிய அளவிலான இந்த படைகளின் தலைமையை முஜாஹிதீன் தலைமை தாங்கினார். இந்த நிலையில் சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் வாங்கப்பட்டது.
இதன்பின் கம்யூனிச ஆதரவு பெற்ற அரசு 1992ம் ஆண்டில் வீழ்ச்சி அடைந்தது. இதனை தொடர்ந்து முஜாஹிதீன் 2 மாதங்கள் ஆப்கானிஸ்தான் அதிபராக பொறுப்பேற்றார். அவரை தொடர்ந்து பர்ஹானுதீன் ரபானி 4 மாதங்கள் அதிபராக பொறுப்பேற்று கொண்டார். ஆனால் முஜாஹிதீன் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையேயான போரினை அடுத்து ரபானி 4 ஆண்டுகள் ஜனாதிபதி பதவியில் தொடர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
எனினும் முன்னாள் அந்நாட்டு ஜனாதிபதியான முஜாஹிதீன் தனது 93 வயதில் காலம் சென்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment