எமது நகரத்தைத் தூய்மையாக வைத்திருப்போம் என்ற கருப்பொருளுக்கு அமைவாக யாழ்.மாவட்டத்திலுள்ள 7 சபைகளுக்கு கழிவகற்றல் வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
அம்பாந்தோட்டையில் வைத்து இன்றையதினம் இந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை நகரசபை ,பருத்தித்துறை நகரசபை ,பருத்தித்துறை பிரதேச சபை ,கரவெட்டி பிரதேச சபை ,சாவச்சேரி நகரசபை ,சாவச்சேரி பிரதேச சபை ,வலிகாமம் மேற்கு பிரதேச சபை ஆகிய சபைகளுக்கே வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கழிவகற்றல் வாகனங்களும் 80 லட்சம் பெறுமதியானவை என்று தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment