தன்னை விட அதிக வயது மூத்த பெண்ணை இளைஞர் பணத்துக்காக திருமணம் செய்து கொண்டார் என சமூகவலைதளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியான நிலையில் அது பொய் என தெரியவந்துள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் அனூப் செபஸ்டின் (29) இவருக்கும் ஜூபி ஜோசப் (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 4-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இருவரின் புகைப்படங்களும் மலையாள பத்திரிக்கையின் திருமண நிகழ்வு பக்கத்தில் வந்தது.
இதிலிருந்து தான் அனூப்புக்கும், ஜூபிக்கும் தலைவலி தொடங்கியது.
அதாவது, ஜூபி தோற்றத்தை வைத்து அவர் 48 வயதான பெண் என்றும், அனூப் 25 வயதான ஆண் என்றும் சமூகவலைதலங்களில் இருவரின் புகைப்படத்தோடு செய்தி பரப்பப்பட்டது.
மேலும், ஜூபியின் ரூ.25 கோடி சொத்துக்கள் மற்றும் 101 சவரன் நகைக்காக தான் அனூப் வயதான பெண்ணான அவரை திருமணம் செய்கிறார் என்றும் கூறப்பட்டது.
இந்த வதந்தியை பார்த்து அனூப்பும், ஜூபியும் அதிர்ச்சியடைந்ததோடு வேதனையும் அடைந்தனர்.
வேண்டுமென்றே சில விஷமிகள் இப்படியான செய்தியை பரப்பியதை அவர்கள் உணர்ந்தனர்.
இதன் காரணமாக இருவரையும் கிண்டல் செய்து போனும், மெசேஜும் வந்த வண்ணம் இருந்தன. இது குறித்து தம்பதி பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
பொலிசார் இந்த செயலை தொடங்கியவரை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அனூப் இந்தியாவின் சண்டிகரில் பணிபுரியும் நிலையில், ஜூபி சார்ஜாவில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment