மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளமையால், குறித்த மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுமாயின், அரசாங்கத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மாகாண ஆளுநர்கள் சிலர் நேற்று காலியில் ஏற்பாடு செய்திருந்த ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஆளுநர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தற்போது காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி இதன்போது தெரிவித்துள்ளதுடன், நாட்டில் 85 சதவீதமான நிர்வாக நடவடிக்கைகள் மாகாண சபைகள் ஊடாகவே முன்னெடுக்கப்படுவதால் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த இடமளிக்க வேண்டும் என தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் இதன்போது தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment