யாழ்.சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் இன்றையதினம் பொருத்தப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் 15 லட்சம் ரூபா பெறுமதியான வீதி விளக்குகள் வழங்கப்பட்டன.
17 வட்டாரங்களுக்கும் சமமாகப் பங்கிட்டு, தவிசாளர் தலைமையில் விளக்குகள் பொருத்தப்பட்டன.
மட்டுவில் வடக்கு , இராமாவில், சந்திரபுரம், வரணி, மந்துவில் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு தொடர்ச்சியாக விளக்குகள் பொருத்தப்படும் என்று சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment