இந்த விபத்தில் பெரிய கருஸல் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது ஜே.ரமீஸ் (வயது-23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, 2 ஆம் கட்டை பகுதியில் நீர் குழாய் இணைப்பு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் பயணித்த இளைஞன், பெக்கோ (ஜே.சி.பி) ரக வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளார்.
காயமடைந்த குறித்த இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸார் குறித்த பெக்கோ (ஜே.சி.பி) வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment