புதுச்சேரியில் பாண்டெக்ஸ் ஊழியர்களுக்கு இன்று வரை தீபாவளி போனஸ் மற்றும் பொங்கல் பரிசு கூப்பன் வழங்காத பாண்டெக்ஸ் நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியூசி சார்பில் முற்றுகை போராட்டம்.
புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனமான நிறுவனமான பாண்டெக்ஸ் நிறுவனத்தில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர் இங்கு பணிபுரியும் இவர்களுக்கு வருடந்தோறும் வழங்கப்படும் தீபாவளி போனஸ் ஒவ்வொரு வருடமும் சரிவர வழங்காத நிலையில் சென்ற வருடம் தீபாவளி போனஸ் மற்றும் இந்த வருடத்தின் பொங்கல் கூப்பன் வழங்கப்படாததை கண்டித்தும் இத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள பாண்டெக்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஏ ஐ டி யு சி தலைவர் செல்வராசு செயலாளர் ரவிச்சந்திரன் தினேஷ் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment