சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளன.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்த எல்லை கிருஷ்ணா பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் இன்று காலை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
ஜம்முவின் மாவட்ட மாஜிஸ்திரேட் ரமேஷ் குமார், தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் தனியார் பாடசாலைகளை மூடும்படி உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஜம்முவை சுற்றி 5 கி.மீட்டர் தொலைவிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று மூடப்பட்டு உள்ளன.
0 comments:
Post a Comment