பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஹொரணை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை, பொகுணுவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயது பெண் ஒருவரே கைதாகியுள்ளார்.
குறித்த பெண் வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறியே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாணந்துறை வலய சட்டத்தை அமுலாக்கும் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நியூஸிலாந்தில் தொழில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து குறித்த பெண்ணால் பெறப்பட்ட 2 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 40 கடவுச்சீட்டுக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment