டுபாயில் வைத்து போதைப்பொருள் வர்த்தகர் மாகந்துரே மதுஸ் கைது செய்யப்பட்டதன் பின்னர் அவருடன் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் அச்சமடைந்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சமகாலத்தில் இலங்கையில் பெருமளவு அரசியல்வாதிகள் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புப்பட்டுள்ளனர். இந்நிலையில் டுபாயில் வைத்து போதைப்பொருள் வர்த்தகர் மாகந்துரே மதுஸ் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக இலங்கையில் பல அரசியல்வாதிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். போதைப்பொருள் வர்த்தகர்களை பிடிப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். எனினும் இதனை ஆரம்பத்திலேயே செய்திருந்தால் இந்த பிரச்சினை இவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்திருக்கதாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment