நாட்டில் பரவியுள்ள தொழுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுல் 10 சதவீதமானவர்கள் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்களுள் அதிகமான சிறவர்கள் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் என தொழுநோய் தடுப்பு பிரிவின், சமூக நிபுணர் வைத்தியர் சுபுன் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் தொழுநோயினால் 1683 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அந்த எண்ணிக்கையில் கடந்த 6 மாத காலப்பதியில் 30 சதவீதம் அதிகரித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய் அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே தொழு நோயிற்கு சிகிச்சை பெற வேண்டும்.
ஆனால் ஆறு மாதங்களுக்கு மேல் காலதாமதமடைந்து சிகிச்சைப்பெற வரும் நோயாளர்களின் எண்ணிக்கை நூற்று 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொழுநோய் ஒழிப்பு குறிப்பிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment