நந்திக்கடலில் சட்டவிரோதமாகக் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கச் சென்ற, நீரியல்வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களுக்கும் கடற்றொழிலாளிகளுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்ததாகத் கூறப்படுகிறது.
திணைக்கள அணியில் சென்ற 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தித் தொழில் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்துக்கு கடற்தொழிலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
அவர்களைப் பிடிக்கச் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் சார்பில் மேற்குறித்த குழுவினர் சென்றுள்ளனர்.
வற்றாப்பளை தொடக்கம் கேப்பாபிலவுக்கு இடைப்பட்ட செம்மன் மோட்டைப்பகுதியில் கடற்கரையிலிருந்து மீனவர்களின் வீடு வரை அதிகாரிகள் குழுவினர் சென்றிருந்தபோதே தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தாக்குதல் தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினர் முள்ளியவளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment