அக்கரப்பத்தனையில் காணாமல்போன குழந்தை 18 மணித்தியாலயங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி தேயிலை மலை பகுதியிலிருந்து பிரதேசவாசிகளால் குறித்த குழந்தை இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
தேயிலை மலை பாதையில் சந்தேகநபர் ஒருவர் குழந்தையை விட்டுச் செல்வதை கண்ட பிரதேசவாசிகள் குழந்தையை மீட்டுள்ளதுடன், குறித்த நபரை துரத்தி பிடிக்க முற்பட்ட போதிலும், அவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
எனினும் குறித்த சந்தேகநபரை தேடும் பணியில் பிரதேசவாசிகளும், பொலிஸாரும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மீட்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment