வவுனியா மாமடுப் பகுதியில் கேரளா கஞ்சாவுடன்இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து, 1 கிலா 200 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த இளைஞருக்கு பொலிஸார் சிவில் நபர் போல் தொலைபேசியில் தொடர்பை மேற்கொண்டு தனக்கு கேராளா கஞ்சா கேட்டுள்ளார்.
அதற்கு குறித்த இளைஞன் 1 கிலா 200 கிராம் கேரளா கஞ்சா 12 ஆயிரம் ரூபா என பேரம் பேசியுள்ளார்.
சம்மதம் தெரிவித்த பொலிஸார் இன்று அதிகாலை மாமடு சந்திக்கு சமுகமளிக்குமாறு குறித்த இளைஞனுக்குக் கூறியுள்ளார்.
இதனையடுத்து இன்று காலை குறித்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் கஞ்சாவுடன் இளைஞனைக் கைது செய்தனர்.
0 comments:
Post a Comment