நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்த குழுவின் அறிக்கை இன்றைய தினம் பிரதமர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் குழு கூட்டத்தின் போது குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் அமைக்கப்பட்ட குறித்த
குழுவின் அறிக்கையே இன்றைய தினம் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதியலிருந்து நேற்று வரையான காலப்பகுதிக்குள் 520.762 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment