முல்லைத்தீவு, வவுனிக்குளத்தில் பொறி வெடியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனிக்குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற அவர் மானுக்காக வைக்கப்பட்டிருந்த பொறி வெடியில் அகப்பட்டே சாவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அம்பாள்புரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சுரேஸ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
வவுனிக்குளம், 6ஆம் கட்டையில் வவுனிக்குளத்தின் அலைகலைப் பக்கம் இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது.
அந்தப் பகுதிக்குச் சென்றவர்கள் சுரேஸ்குமாரை மீட்டு உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் மல்லாவி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும் அவர் முன்னரே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment