மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு வேறு பகுதியிலிருந்து ஆண்கள் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டன.
மட்டக்களப்பு ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில், கிணற்றுக்குள் வீழ்ந்து கிடந்த நிலையில் கந்தக்குட்டி நவரெட்ணம் (வயதுரு-49) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதேவேளை, வந்தாறுமூலை பிரதான வீதியை அண்டியுள்ள கடையொன்றிலிருந்து அரசமணி தனுஷியன் (வயது-25) என்ற இளைஞனது சடலமொன்றும் மீட்கப்பட்டது.
சம்பவங்கள் தொடர்பாக ஏறாவூர் மற்றும் ஆயித்தியமலைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment